தேவை ஏற்பட்டால் 4ஆவது கொவிட் தடுப்பூசியை வழங்க இலங்கை தயாராக உள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொவிட் பரவல் முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
ஆகையால் , கொவிட் தடுப்பூசியின் 4 ஆவது டோஸை வழங்க அரசாங்கம் மேலதிக கொள்வனவு செய்வதில்லை.
இருப்பினும், 4- ஆவது டோஸ் தேவைப்படும் போதும் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான அமைப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்