இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின்றி ஜனாதிபதியாக வருவதற்கு பசில் ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
‘ஹிரு’ சேனலுடனான நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலை தீவிரமடையும் போது ஒரு கட்டத்தில் ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோத்தபாய ராஜபக்ஷ விலகுவார் என தாங்கள் நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பிரதமர் இப்போது மோசமான நிலையில் இருப்பதால் அந்த வாய்ப்புகள் உள்ளன.
பசில் ராஜபக்ஷ தேர்தலுக்குச் செல்லாமல் வேறு வழியில் ஜனாதிபதியாக வரத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
—————-
Reported by : Sisil.L