தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்றால் ஏன் இந்த நாடு ஒன்றுபட்டதாக இருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கினை பிரித்து தனிநாடாக வழங்க வேண்டியது தானே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஒரே நாட்டுக்குள் ஒரே சட்டத்தினை பேணிப்பாதுகாக்க முடியாவிட்டால் ஒரே நாடு தேவையில்லை என்ற நிலைமைக்கு எங்களை தள்ளிவிடுகின்றீர்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த 2022 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்விற்கு நாங்கள் வழமை போல நினைவேந்தலினை முன்னெடுத்தோம் ஆனால் அந்த ஆண்டு சிலருக்கு நீதிமன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது நினைவு கூற முடியாது என்று இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு இந்த நாட்டில் ஒரு சட்டம் இல்லை என்பது இதன் மூலமாக வெளிப்படையாக தெரிகின்றது.
இந்த நாட்டை ஆள வருகின்ற ஆட்சியாளர்கள் தாங்கள் நினைத்ததை சட்டமாக இந்த நாட்டிலே கொண்டு நடத்துவது தான் ஒரு முறையாக இருக்கின்றது ஏனென்றால் தொடர்ச்சியாக நாங்கள் அந்த தூபியிலே நினைவு கூர்ந்து விளக்கேற்றி வருகின்றோம் என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றது.
2021 ஆம் ஆண்டு நாங்கள் அந்த தூபியிலே நினைவேந்தலினை செய்தோம் 2022 ஆம் ஆண்டு நமக்கு அதில் தடை விதிக்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு திரும்பவும் நினைவேந்தலினை செய்திருக்கின்றோம் எதுவிதமான பிரச்சனைகளும் இல்லை 2024 ஆம் ஆண்டு கூட இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த தூபியிலே விளக்கேற்றி இருந்தோம் எது விதமான பிரச்சினையும் இல்லை.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி கோட்டபாய ஆட்சியிலே இருந்த நேரம் அவருடைய உத்தரவு இந்த நாட்டின் சட்டம் அல்ல இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு அல்ல அவருடைய உத்தரவின் பேரில் தடை உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தது.
ஒன்று இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா அல்லது இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் இருக்கின்றதா என்பதனை இந்த நாட்டு மக்கள் உணர வேண்டும் ஏனென்றால் வடக்கு கிழக்கிலே இறந்தவர்களுக்கு நாங்கள் அவர்களை நினைவு கூறவும் முடியாது அவர்களுக்காக விளக்கேற்றவும் முடியாது என்று கூறினால் தெற்கிலே இந்த நாட்டிலே கிளர்ச்சியை ஏற்படுத்திய ஜேவிபியினர் அவர்கள் தங்களது தலைவர்களை அவர்களுடன் மரணித்தவர்களை நினைவு கூறலாம்.
அவர்களுக்காக பல்கலைக்கழகத்தில் கூட சிலை அமைத்து நினைவு கூறலாம் என்றால் வடக்கு கிழக்கிலே ஏன் இவ்வாறான தடைகள் காணப்படுகின்றது. இந்த தடைகள் மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்கள் தான் விரும்பியபடி செய்பவர்களாக இருந்தால் இந்த நாட்டிலே ஜனநாயகமும் இல்லை சட்டமும் இல்லை.
சட்டம் இல்லாத நாட்டிலேயே ஒரு சட்டத்துக்கான அமைச்சு கூட இந்த நாட்டிலே தேவையில்லை உங்களுக்கு இந்த நாட்டிலே தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டத்தை நீங்கள் அமல்படுத்துகின்றீர்கள் என்றால் ஏன் இந்த நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் இந்த நாட்டை நீங்கள் வடக்கு கிழக்கை பிரித்து தன நாடாக கொடுக்க வேண்டியதுதானே என தெரிவித்தார்.
Reported by:S.Kumara