தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில், சிக்கி இலங்கை பிரஜையொருவரும் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்ததாக வௌிவிவகார அமைச்சர் கூறினார்.
இந்த சம்பவத்தில் மேலும் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சியோலில் உள்ள பொலிஸார் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வௌிவிவகார அமைச்சு மற்றும் தென் கொரியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மேலதிக தகவல்கள் திரட்டப்படுவதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
தென் கொரிய தலைநகர் சியோல் நகரில் நடைபெற்ற களியாட்டம் ஒன்றின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி குறைந்தது 153 பேர் உயிரிழந்துள்ளதுடன், 82 பேர் காயமடைந்துள்ளனர்.
Reported by :Maria.S