நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் மற்றும் அசெம்பிளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
18,000 ரூபாவாக இருந்த மவுண்டன் சைக்கிள் தற்போது 35,000 ரூபாவாக அதிகரித் துள்ளதாக சங்கத்தின் செயலாளர் றிஸ்னி இஸ்மத் தெரிவித்தார்.
பெண்கள் பயன்படுத்தும் சைக்கிளின் விலையும் உயர்ந்துள்ளதாகக் கூறும் அவர், துவிச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றமையும் அவற்றிற்கு 55% வரி விதிக்கப்பட்டமையும் துவிச்சக்கர வண்டிகளின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆடம்பரப் பொருட்களின் பட்டியலிலிருந்து இவை நீக்கப்பட்டு வரியை பூச்சியமாகக் குறைத்தால் சுமார் 19,000 ரூபாவுக்கு துவிச்சக்கர வண்டியை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் மற்றும் அசெம்பிளர்கள் சங்கம் மேலும் தெரிவிக்கின்றது.
Reported by:Anthonippillai.R