தனிமைப்படுத்தல் ஊரடங்கை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ பொலிஸ் மா அதிபர் சி.டி.விக் கிரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

 
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார் என ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

 
நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை ஒக்டோபர்  01 அதிகாலை 4.00 மணி வரை நீடிக்க நேற்று முடிவு செய்யப்பட்டது.

 
நேற்றுக் காலை ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இணைய வழியில் நடந்த கொவிட் -19 கட்டுப்பாடு விசேட செயலணிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
——————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *