கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்வோர் கொரோனா தடுப்பூசி அட்டைகள் வைத்திருக்க வேண்டியது அவசியம் எனவும் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் மாத்திரம் கலந்துகொள்ளும் நிலையில் ஆலய வளாகத்தினுள் எவ்விதமான வர்த்தக நட வடிக்கைகளிலும் ஈடுபட முடியாது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் 11ஆம், 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் தற்போதுள்ள கொரோனா இடர் நிலை காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 100 பேரை மாத்திரமே கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்துக்கு அனுமதிப்பது என வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் கச்சதீவு அந் தோனியார் ஆலய உற்சவம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. எதிர்வரும் 11ஆம், 12 ஆம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் உற்சவம் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
——————-
Reported by : Sisil.L