நீண்ட வார இறுதியில் பொது இடங்களுக்குச் செல்லும்போது கவனமாக இருக்குமாறும் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் மக்களைக் கேட்டுக்கொள்கிறார்.
நாட்டு மக்கள் நீண்ட விடுமுறையில் பயணம் செய்ய ஆசைப்படுவதால், முடிந்தவரை அமைதியான இடத்துக்குச் செல்லுமாறும், ஆபத்தைத் தவிர்க்க பயணத்தைத் தவிர்க்க முயற்சிக்குமாறும் மருத்துவர் கேட்டுக்கொள்கிறார்.
நாட்டில் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டாலும், 5 மில்லியன் பேர் மட்டுமே மூன்றாவது டோஸைப் பெற்றுள்ளனர்.
மேலும் 10 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
——————-
Reported by : Sisil.L