அப்பிள், ஒரேஞ்ச், திராட்சை, சொக்லேட் பஸ்தா போன்ற அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கை தற்போது இந்தப் பிரச்சினையை பரிசீலித்து வருகிறது.
அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக அத்தியாவசியமான பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தியாவசியமற்ற அவ்வகை உணவுகளுக்குப் பதிலாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாற்றீடுகளைப் பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
—————————–
Reported by : Sisil.L