டெல்டா திரிபு வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் அடையாளம்

டெல்டா கொவிட் திரிபால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிலியந்தல கஹதுடுவ, ஜயலியகம பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். தொற்றுக்காளானவர் பொலன்னறுவை கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார மருத்துவ அதிகாரி தனுக பத்மராஜ தெரிவித்தார்.

 குறித்த நபர் ஸ்லேவ் ஐலண்ட் பகுதியில் முன்னணி கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணி புரியும் 47 வயதான தொழிலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 
பாதிக்கப்பட்டவரின் தாயார், மனைவி மற்றும் மகன் உட்பட 50 குடுபங்கள் ஜயலியகம பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை கஹதுடுவ, ஜயலியகம பிரதேசத்துக்கு பயணத் தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
—————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *