இந்திய கொவிட் இனமாக அறியப்படும் டெல்டா குறைந்தது 98 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.
குறைந்த மற்றும் அதிக தடுப்பூசி வீதங்களைக் கொண்ட நாடுகளில் கூட டெல்டா வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அட்னாம் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற ஒரு மத்திய கலந்துரையாடலில் பங்கேற்ற போதே அவர் இக்கருத்துகளைக் கூறினார்.
இந்த வகை ஓர் ஆபத்தான வகை என்றும் அது தொடர்ந்து உருவாகி சிதைந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Reported by : Sisil.L