டீசல் தட்டுப்பாடு; தொடரும் பதற்றம் -பஸ் சேவைகள் பாதிப்பு


தொடரும் பதற்றம் மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக இன்று பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 10 வீதமான பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 3,000 பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
சாதாரண நாளில் அந்தச் சபையால் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 5,000ஆகும். ஆனால் பயணிகள் மற்றும் ஊழியர்களின் வருகை குறைவினால் இன்று சுமார் 3000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
————
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *