டீசல் ஏற்றிய மேலும் 02 கப்பல்கள் இன்றும் நாளையும் நாட்டை வந்தடையவுள்ளன. அவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெற்றிக் தொன் ஓட்டோ டீசலும் 7000 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் உள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
மற்றைய கப்பலில் 28,000 மெற்றிக் தொன் டீசலும் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் 9000 மெற்றிக் தொன் எரிபொருளும் உள்ளதாகவும் இந்த இரு கப்பல்களுக்குமான கடன் கடிதத்தை பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
எரிபொருள் ஏற்றிய மேலும் 02 கப்பல்கள் எதிர்வரும் 06, 07 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
————–
Reported by : Sisil.L