ஜோர்டானில் இரசாயன தாங்கி வெடித்து விபத்து- நச்சு வாயுக் கசிவால் 12 பேர் உயிரிழப்பு

ஜோர்டானின் அகபா துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பில் கிரேன் மூலம் குளோரின் தாங்கிகள் ஏற்றப்பட்டன.

 அப்போது, திடீரென கிரேன் செயலிழந்ததை அடுத்த, ஒரு குளோரின் தாங்கி மேலிருந்து விழுந்து வெடித்தது.

 

 இதில், பெரியளவில் மஞ்சள் நச்சுப் புகை வெளியேறியது. இதனால், இந்த விபத்தில் அங்கிருந்த கப்பல்துறை பணியாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

 
இந்நிலையில், இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

 
அகபா துறைமுகத்தில் மதியம் 3.15 மணிக்கு குளோரின் தாங்கி விழுந்து வெடித்தது. இதனால் வாயுக் கசிவு ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் 199 பேர் இரசாயன பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.  

 

இதன் எதிரொலியால், துறைமுகத்திற்கு வடக்கே 16 கி.மீ. தொலைவில் உள்ள அகபா நகரவாசிகள் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி உள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, அகபாவின் தெற்கு கடற்கறையில் இருந்து பொதுமக்கள் வெறியேற்றினர். பாதுகாப்புத் துறை சிறப்புக் குழுக்கள் துறைமுகத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
————
Reported by:Anthonippilla.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *