ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அதிகரிப்பு

ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் 2021-ல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. இதற்கு கொரோனா வைரஸ் தொற்று ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் குழந்தைகள் நல காப்பகத்தை அடிக்கடி ஆய்வு செய்ய முடியாத நிலையும் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.


2021-ல் குழந்தைகளுக்கு எதிராக துன்புறுத்தல் வழக்குகள் 1.7 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரமாக உயர்ந்துள்ளன.


இதில் உணர்வுபூர்வமான தாக்குதல் தொடர்பாக 80,299 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 19,185 வழக்குகள் உடல் தொடர்பான தாக்குதல் காரணமாக பதியப்பட்டுள்ளன. குறைபாடு என 8270 வழக்குகளும், பாலியல் தொந்தரவு காரணமாக 296 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *