ஜனவரி முதல் கடவுச்சீட்டு பெற்றவர்களில் 70 ஆயிரம் பேர் வெளிநாடு சென்றுள்ளனர்

இந்த வருட ஜனவரி மாதம் முதல் இதுவரை 400,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும் அதில் இதுவரை 70,000 பேர் மாத்திரமே வெளிநாடு சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


நாளாந்தம் விநியோகிக்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை தற்போது 2,400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சேவை ஊடாக 1,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுவதுடன் சாதாரண சேவையின் கீழ் 800 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.

 

அத்துடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் விண்ணப்பங்களை கையளிக்க முடியாதவர்களுக்கு பிறிதொரு தினம் வழங்கப்படுவதுடன் அவ்வாறு நாள் ஒதுக்கப்பட்டவர்களில் 600 பேரின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் நாளாந்தம் விநியோகிக்கப்படுகின்றன.


Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *