செயற்கை இருதயம் பொருத்தி உயிர் பிழைத்த கனேடிய சிறுமி

கனடாவில் 12 வயது சிறுமியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்கே சென்று மீண்டு வந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


மரியம் டன்னோஸ்  (Mariam Tannous) என்ற இந்த 12 வயது சிறுமி பல தடவைகள் இருதய சத்திரசிகிச்சைகள் செய்து கொண்ட போதும் அவை ஒன்றும் வெற்றியளிக்கவில்லை.


எனினும் மருத்துவ உலகின் விந்தைகளில் ஒன்றாக இந்தச் சிறுமி   உயிருடன் மீண்டு வந்துள்ளார்.


இந்தச் சிறுமிக்கு  செயற்கை இருதயம் பொருத்தப்பட்டுள்ளது. கனடாவைப் பொறுத்தவரை மிக இள வயதில் செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட நபராக இந்தச் சிறுமி கருதப்படுகின்றார்.


இந்த செயற்கை இருதயமானது பொதுவாக வயது வந்தவர்களுக்கு பொருத்தப்படுகின்ற போதும் கனடிய மருத்துவர்கள் தங்களுடைய அதீத முயற்சியினால் குறித்த சிறுமிக்கு இந்த இருதயத்தை வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.

கண்ணீர் மிகுந்த நாட்களில் இருந்து தாம் மீண்டு உள்ளதாக குறித்த சிறுமியின் தாய் லிண்டா அன்டுவான் அட்வார்    ஆனந்தக் கண்ணீர் மல்க கூறுகின்றார்.


இதனை ஓர் அதிசயமாக பார்ப்பதாகவும் தனது மகள் வலுவானவர் எனவும் அவர் வாழ்வதற்கு ஆசைப்படுகிறார் எனவும் சிறுமி மரியமின் (Mariam Tannous)  தாய் கூறுகின்றார்.


இரண்டு மாதங்களில் பொருத்தமான ஓர் இதயம், மாற்று அறுவை சிகிச்சைக்காக கிடைக்கப்பெற்றதும் மீண்டும் செயற்கை இருதயம் அகற்றப்பட்டு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.


சத்திர சிகிச்சையின் பின்னர் வழமை போல் சிறுவர்களைப் போன்று அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபட முடியும் என மருத்துவர் அமீர் ஜீவா தெரிவிக்கின்றார்.


Reported by: Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *