சுவீடனில் சிகரெட் துண்டுகளை பொறுக்கும் பணியில் காகங்கள்

ஐரோப்பிய நாடான சுவீடன் நகரத்தின் தெருக்களிலும் சதுக்கங்களிலும் வீசியெறியப்பட்ட சிகரெட் துண்டுகளை பொறுக்கும் பணியில் காகங்கள் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது.


செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அங்கு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் புதிய முறையை கோர்விட் கிளீனிங் (Corvid Cleaning) எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


அதேசமயம் ஒவ்வொரு சிகரெட் துண்டையும் பொறுக்கி அதற்கான இயந்திரத்தில் போடும்போது காகங்களுக்குக் கொஞ்சம் உணவு கொடுக்கப்படும் என்றும் சுவீடனின் தெருக்களில் ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் சிகரெட் துண்டுகள் வீசியெறியப்படுவதாகவும்  Keep Sweden Tidy Foundation தெரிவித்துள்ளது.


காகங்களைக் களமிறக்குவதால், சுவீடன் நகரில் சிகெரெட் துண்டுகளை அகற்றும் செலவில் குறைந்தபட்சம் 75 வீதம் சேமிக்க முடியும் என கோர்விட் கிளீனிங் நிறுவனம் கூறுகிறது.


இதேவேளை இத்தகைய வேலையை செய்வதற்கு New Caledonian வகைக் காகங்கள் பொருத்தமானவை என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
மேலும் அக்காகங்களுக்கு கற்றுக்கொடுத்துப் பழக்குவது எளிது என்றும் அவை தவறுதலாக குப்பைகளை உண்ணும் அபாயம் குறைவு என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
———————————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *