சீன உரக் கப்பலுக்கு மக்கள் வங்கி 6.9 மில்லியன் டொலரை செலுத்துகிறது

தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பதாக இலங்கை நிராகரித்த சீன உரத்தின் கையிருப்புக்கு பணம் செலுத்துவதற்கு மக்கள் வங்கி தீர்மானித்துள்ளது.


இதன்படி, குறித்த சீன நிறுவனத்துக்கு இன்று 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.


கொடுப்பனவுகளை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கப்பட்டதை அடுத்து இந்தப் பணம் செலுத்தப்படவுள்ளது.


உரக் கையிருப்பு ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும், இரு தரப்பும் மீண்டும் ஒரு தரமான உரத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
இதன்படி குறித்த நிறுவனத்துக்கு மக்கள் வங்கியின் ஊடாக பணம் செலுத்தப்பட உள்ளது.
———————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *