இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்(Julie J. Chung) அண்மையில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்த கருத்திற்கு இலங்கைக்கான சீன தூதரகம் பதிலளித்துள்ளது.
சீனாவை குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர் அமெரிக்க தூதுவர் சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சீன தூதரகத்தின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயத்தை சீனா தொடர்ந்தும் தாமதிக்கக்கூடாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி கடந்த 12ஆம் திகதி பிபிசியின் நியூஸ் நைற்றில் தெரிவித்திருந்தார்.
கடன் மறுசீரமைப்பு தாமதமானது இலங்கைக்கு மோசமான விடயம் எனவும் இலங்கையர்களுக்காகவும் சீனா இந்த பணியை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.அமெரிக்க தூதுவர் சீனா, சீனா, சீனா… என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை சீர்குலைப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுவதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
Reported by :Maria.S