சர்ச்சைக்குரிய யுவான் வாங்-5 என்ற சீன ஆய்வுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு வெளிவிவகார அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
கடந்த 11 ஆம் திகதி கப்பல் நாட்டை வந்தடையவிருந்த நிலையில் உரிய அனுமதி கிடைக்காததால் கப்பலின் வருகை தாமதமானது.
இந்த உயர்தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பல் கடந்த ஜூலை 14ஆம் திகதி சீனாவிலிருந்து புறப்பட்டது.
குறித்த கப்பலினால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுக்கூடும் என இந்தியா குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சீனக் கப்பலை வரவேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் அதுரலியே ரதன தேரர் ஆகியோர் அந்த இடத்துக்குச் சென்றிருந்தனர்.
————-
Reported by :Maria.S