பிரெஞ்ச் சுகாதாரத் தொழிலாளர்கள் கொவிட் தடுப்பூசி போடவில்லை எனின் சம்பளம் வழங்குவதில்லை என பிரெஞ்ச் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மருத்துவர்கள், தாதியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் இது குறித்து அறிக்கை வழங்கியுள்ளது. பிரெஞ் அரசாங்கக் கூற்றுப்படி அவர்கள் அனைவரும் கொவிட் தடுப்பூசியை இப்போது பெற வேண்டும்.
இதேவேளை அடுத்த மாதம் முதல் கடைகள், மதுபான நிலையங்கள், சினிமாத் திரையரங்குகள் மற்றும் நீண்ட தூர ரயில் பயணங்களுக்கு சுகாதார அனுமதி வழங்குவது கட்டாயமாகும் என பிரெஞ்ச் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
————–
Reported by : Sisil.L