கொழும்பு பாடசாலைகள் ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றன 

எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமம் காரணமாக கொழும்பில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்துக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எஸ். என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.


புறநகர்ப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் வாரத்தில் ஒன்லைன் முறையில் கற்பிக்க முடிவு செய்துள்ளதாகவும், ஒன்லைன் கல்வி நடைபெறும் பகல் வேளையில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் கல்வித் திணைக்கள அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு அடுத்த வாரக் கல்வி நிலை குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிய வருகிறது.
————

Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *