வரலாற்று சிறப்பு மிக்க கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் 188ஆவது வருடாந்தத் திருவிழா இன்று (13) திங்கட்கிழமை வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது.
இதன்படி அதிகாலை 4.00 மணிக்கு தமிழ் மொழியிலும் 5.00 மணிக்கு சிங்கள மொழியிலும் காலை 6.00 மணிக்கு தமிழ் மொழியிலும் காலை 7.00 மணிக்கு சிங்கள மொழியிலும் காலை 8.00 மணிக்கு தமிழ் மொழியிலும் காலை 10.00 மணிக்கு சிங்கள மொழியிலும் நண்பகல் 12.00 மணிக்கு ஆங்கில மொழியிலும் திருப்பலிகள் இடம்பெற்றன.
மாலை 5.00 மணிக்கு புனிதரின் திருச்சுரூப பவனி இடம்பெற்று இரவு 8.00 மணியளவில் புனித அந்தோனியாரின் திருச்சுரூப ஆசீர்வாதம் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் வழங்கப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்(2019), கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பொதுமக்கள் பங்களிப்பின்றி திருவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
———————
Reported by:Anthonippillai.R