வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.
இதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் பஸ்களில் கொழும்பிற்கு வரவிருந்த நிலையில் வீதித் தடைகள் ஏற்படுத்தி பஸ்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர். எனினும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர்கள் எரான் விக்ரமரத்ன, கபீர் ஹாசிம், எஸ்.எம். மரிக்கார், ராஜித சேனாரத்ன மற்றும் பாட்டலி ரணவக்க ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Reported by : Sisil.L