கொரோனா பூஸ்டர் மருந்தால் பக்கவிளைவு என்பது வதந்தி : மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பூஸ்டர் மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற வதந்திகள் கட்டுக்கதைகள் என்றும் அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.


தடுப்பூசி காரணமாக எந்த நோயாளிக்கும் பக்கவாதம், ஆண்மைக் குறைவு அல்லது பிற பக்க விளைவுகள் இருப்பதாக கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.


தடுப்பூசி போட்ட பிறகு சில நோய்கள் ஏற்பட்டதாக சிலர் கூறினாலும், தடுப்பூசியால் அவை ஏற்படவில்லை என்பது தெரிய வருகிறது என்றார்.
கொரோனா நோய் தொற்றுக்குப் பிறகு சில காலத்துக்கு ஆண்மைக்குறைவு ஏற்படலாம் என்றாலும், அது நீண்ட காலத்துக்கு அல்ல என்றும் அவர் கூறினார்.
————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *