நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,077 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரில் 31 பெண்களும் 16 ஆண்களும் அடங்குவர்.
பெண்களில், 21 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஆண்களில் 13 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இருவர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள், ஒருவர் 30 வயதுக்குக் குறைவானவர்.
————————-
Reported by : Sisil.L