காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் சரக்கு படகுச் சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
கேகேஎஸ் மற்றும் காரைக்கால் துறைமுகம், புதுச்சேரி துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே சரக்கு கப்பல் சேவையைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சரக்கு படகுச் சேவையும் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சேவையானது இலங்கையர்கள் எரிபொருள், உரம், பால்மா, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள உதவும் என அமைச்சர் தெரிவித்தார்.
———–
Reported by:Anthonippillai.R