குரூரத்தனமும், குண்டர்த்தனமும் நிறைந்த மக்கள் ஆணை இல்லாத அரசு இது!

குரூரத்தனமும், குண்டர்த்தனமும் நிறைந்த மக்கள் ஆணை இல்லாத இந்த அரசில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடப்பது வருத்தமளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் தாக்கப்படவுள்ள இளைஞர்கள் என்ற பெயர் பட்டியல் சமூக வலைதளங்களில் பரவிவருவதாகவும், எனவே இனிவரும் காலங்களில் அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது இது போன்ற அட்டூழியங்கள் நடந்தால், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தபிறகு, இதுபோன்ற கொடூரமான குண்டர்தன அரசியலை செயல்படுத்தும் அனைவருக்கும் தகுதி தராதரம்பாராது அவர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தாம் விரும்பியவாறு செயற்படலாம் என மொட்டுஉறுப்பினர்கள் நினைத்தால் அது தவறு எனவும், அரசியல் பழிவாங்கல்களை தாம் அங்கீகரிக்கவில்லை என்றாலும், இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் அந்தஸ்து பாராமல்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் தண்டனை வழங்கப்படும் எனவும், இவ்வாறான கோழைத்தனமான செயற்பாடுகளை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மொட்டுவின் நிழல் அரசாங்கத்தின் குண்டர்தன அரசியல் தலைவர்களில் ஒருவரான கடுவலை முன்னாள் பிரதிமேயர் சந்திக்க அபேரத்னவின் தாக்குதலுக்கு உள்ளான சமூக ஆர்வலரும் கடற்படை பொறியியலாளருமான பியத் நிகேஷலவின் உடல்நிலை குறித்து கேட்டறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *