கிளிநொச்சி சந்தையும் நேற்று முதல் முடக்கப்பட்டது

கிளிநொச்சி சேவை சந்தை நேற்று முதல் மூடப்பட்டுள்ள நிலையில் வர்த்தகச் செயல்பாடுகள் வெளி இடங்களில் இடம்பெறுகின்றன.கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள கிளிநொச்சி சேவைச் சந்தையில் 500க்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.
மாவட்டத்தில் அதிவேகமாக பரவி வரும் கொவிட் பரவல் காரணமாக நேற்று முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து வர்த்தகச் செயல்பாடுகளும் கிளிநொச்சி சேவைச் சந்தையில் இடம்பெறாது என கரைச்சி பிரதேச சபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதற்கு அமைவாக நேற்று சேவைச் சந்தையின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டு வெறிச்சோடிக்காணப்பட்டது.இதேவேளை, மீன் விற்பனை உள்ளிட்ட வர்த்தகச் செயற்பாடுகள் வெளி இடங்களில் இடம்பெற்றமையை அவதானிக்க முடிந்தது.கிளிநொச்சி சேவைச் சந்தைக்கு நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.இந்த நிலையில், வர்த்தக நிலைய ஊழியர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொவிட் பரவல் அதிகரித்தது.

இதேவேளை, நாளாந்தம் நூறு தொற்றாளர்களைக் கடந்த கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 257 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த நிலையில் மக்கள் அதிகம் நெருங்கும் பகுதிகளைத் தவிர்க்கும் வகையில் குறித்த செயல்பாடு முன்னெடுக்கப்பட்டது.மாவட்டத்தில் கொவிட் பரவலின் அதிகரிப்பு தொடர்பில் மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும், தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து பாதுகாப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் தொடர்ந்
தும் அறிவுறுத்தல் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *