வீட்டில் உறக்கத்தில் இருந்த இளைஞர் மீது வாள்வெட்டுதாக்குதல் நடத்தப்பட்டது.இதில் படுகாயமடைந்த அவர் யாழ். போதனா மருத்துவமனை யில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று மாலை கிளிநொச்சி -முரசுமோட்டை – சேற்றுக்கண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அத்துடன், அவரின் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாள்வெட்டுக் குழுவினரால் எரியூட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
——————
Reported by : Sisil.L