கிளிநொச்சியில் தடுப்பூசி பெற்ற ஆடைத் தொழிற்சாலை பணியாளர் பலருக்கு திடீர் உடல்நல பாதிப்பு

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு நேற்றைய தினம் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.


இந்நிலையில் அவர்களில் 50இற்கும் அதிகமானோர் திடீர் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனால் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் தேறி வருவதாகவும் தெரியவருகிறது.


இதேவேளை நிலைமை பாரதூரமாக இல்லை என்றும் சாதாரணமாக அவர்கள் குணமடைந்து வைத்திய சாலையிலிருந்து வெளியேறி வருவதாகவும் வைத்தியசாலையுடன் தொடர்புபட்ட ஒருவர் தெரிவித்தார்.
————————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *