கிளிநொச்சி – வட்டக்கச்சி – கட்சன் வீதி பகுதி நேற்றுடன் முடக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நேற்று 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்தே சுமார் 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இந்தப் பகுதி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது.
அடுத்த இரு வாரங்களுக்கு இந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
—————-
Reported by : Sisil.L