கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி மற்றும் நெல்லை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் பிரிவு 10(1)(b)(ii) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு இணங்க அதிகாரசபை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் அல்லது விநியோகஸ்தர்கள் கால்நடை தீவனத்துக்கு மூலப்பொருளாக அரிசி அல்லது நெல்லை நேரடியாக இறக்குமதி செய்யவோ, விற்பனை செய்யவோ, காட்சிப்படுத்தவோ,சேமித்து வைக்கவோ, கொண்டு செல்லவோ, விநியோகிக்கவோ அல்லது கொள்வனவு செய்யவோ முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு ஜூன் 24, 2022 முதல் அமுலுக்கு வருகிறது.
—————–
Reported by:Anthonippillai.R