காலிமுகத்திடலில் மீதமுள்ள தற்காலிக கூடாரங்களையும், அங்குள்ள மக்களையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இன்று (12) பிற்பகல் இந்த வெளியேற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில், போராட்டக்காரர்கள் காலிமுகத் திடல் போராட்டப் பகுதியிலிருந்து முழுமையாக வெளியேறப் போவதாக அறிவித்திருந்தனர்.
காலிமுகத்திடல் பிரதேசத்தை விட்டு வெளியேறிய போதிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தமது இலக்குகள் அடையும் வரை போராட்டம் ஓயாது எனவும் செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
————
Reported by :Maria.S