கொழும்பு துறைமுக நகருக்கு நிகரான சுற்றுலா வலயமொன்றை காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
காலி துறைமுகத்தின் அபிவிருத்தியுடன், பயணிகள் கப்பல்களுக்கான புதிய பயணிகள் முனையம் மற்றும் 40 ஹெக்டேர் நிலப்பரப்பு கடல் நீரால் நிரப்பப்பட்டு புதிய நில சுற்றுலா வலயத்தை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
இதன் மூலம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீருக்கடியில் ஓய்வு விடுதிகள், நீர் விளையாட்டுப் பகுதிகள் மற்றும் ஹோட்டல்களை கட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
கொழும்பில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
————
Reported by : Sisil.L