நேற்று (08) பிற்பகல் முதல் மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது.
மஸ்கெலியா, ஸ்ரீ பாத, நல்லதண்ணி, அப்கட், சாமிமலை ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளதாக மவுசாக்கலை நீர்த்தேக்கப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 120 அடியில் இருந்து 48 அடியாகக் குறைந்துள்ளதாக மவுசாக்கலை நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, ஹட்டன், நோர்வூட் மற்றும் பொகவந்தலாவ ஆகிய காசல்ரீ நீர்த்தேக்கப் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகின்றது.
நிலவும் மழை காரணமாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் நீர் பாவனையாளர் சேவை நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
———
Reported by : Sisil.L