ஸ்பெயினில் உள்ள கனேரி தீவுக் கடலில் படகு கவிழ்ந்ததில் 16 குடியேற்றவாசிகள் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக ஸ்பெயின் நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைய முற்பட்ட 58 பேர் கொண்ட படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்திலிருந்து 41 நபர்களை கடலோர காவல்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.மேலும் உயிரிழந்த ஒருவரது சடலத்தையும் மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் படகு நெரிசல்களுக்கு மத்தியில் பயணம் செய்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் காணாமல் போன 16 அகதிகளைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
——————–
Reported by : Sisil.L