கனேடிய நிரந்தர வதிவிட உரிம விண்ணப்பக் கட்டணம் அதிகரிப்பு  

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமம் கோரி விண்ணப்பிப்பதற்கான கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

 
நிரந்தர வதிவிட உரிமத்துக்கான தற்போதைய கட்டணம், முதன்மை விண்ணப்பதாரருக்கும் அவரது கணவன் அல்லது மனைவிக்கும் 500 கனேடிய டொலர் ஆகும். அது ஏப்ரல் 30 முதல் 515 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.

 
பெடரல் அதிதிறன் விண்ணப்பதாரர்கள், மாகாண நொமினி திட்டம் மற்றும் கியூபெக் திறன் பணியாளர்கள், அட்லாண்டிக் புலம்பெயர்தல் வகுப்பு மற்றும் பெரும்பாலான Economic Pilots ஆகிய திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்போருக்கான கட்டணம் 825 டொலரிலிருந்து 850 டொலராக உயர்த்தப்பட உள்ளது. அவர்களது கணவன் அல்லது மனைவிக்கான கட்டணமும் 850 டொலர். அவர்களைச் சார்ந்த குழந்தைகளுக்கான கட்டணமும் 225 டொலரிலிருந்து 250 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.


ஆனால், நிரந்தர வதிவிட அட்டைகள், பயண ஆவணங்கள் மற்றும் புலம்பெயர்தல் ஆவணங்கள் சான்றளித்தல் அல்லது புதிதாக மாற்றுதல் ஆகிய விடயங்களுக்கான கட்டணங்களில் மாற்றமில்லை.


2020ஆம் ஆண்டு முதலே, கனடா நிரந்தர வதிவிட உரிமத்துக்கான கட்டணத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தி வருகிறது.


இந்தக் கட்டண உயர்வு கனடாவின் பொருளாதாரத்துக்கு பெருமளவில் உதவுவதாக கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரும் தெரிவித்துள்ளார்.


மேலும் 2024ஆம் ஆண்டு, மீண்டும் பெடரல் மட்டத்தில் கட்டணம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.  



Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *