மழை மற்றும் பெரு வெள்ளத்திலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் இன்னமும் மீளாத நிலையில், அடுத்த புயல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வழக்கத்துக்கு மாறாக அண்மைய நாட்களில் அதிக மழை பெய்துள்ள நிலையில், மீண்டும் புயல் மற்றும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா, வன்கூவர் மற்றும் அபோட்ஸ்ஃபோர்ட் வானிலை மையங்களில் அண்மைய நாட்களில் அதிக மழை அளவைப் பதிவு செய்துள்ளன. எதிர்வரும் நாட்களில் மற்றும் அடுத்த வாரம் மத்தியில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர செவ்வாய் மற்றும் புதன்கிழமையில் கடும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், மக்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும், தென் கடற்கரையைப் பாதிக்கும் இந்த அசாதாரண புயல் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வியாழக்கிழமை 40 முதல் 60 மி.மீ. அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் கனமழை தொடர்பில் இதுவரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதில்லை எனவும், 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்னர் விடுக்கப்பட்டிருக்கவே வாய்ப்புள்ளது எனவும், ஆனால் தற்போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாகவும் வானிலை அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
—————-
Reported by : Sisil.L