நடந்து முடிந்த கனடிய பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 610 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.கனடா வரலாற்றிலேயே மிக அதிக தொகை செலவிடப்பட்ட தேர்தலும் இது தான் எனக் கூறப்படுகிறது. 2019 பொதுத் தேர்தலை விடவும் 100 மில்லியன் டொலர் அதிகமாகவும் செலவாகியுள்ளது.இவ்வளவு பெருந்தொகை செலவிட்டு தேர்தல் முன்னெடுப்பது உண்மையில் மக்களுக்கு பயனளிக்குமா என்ற கேள்வியும் தற்போது பரவலாக எழுந்துள்ளது.
ஆனால், பூர்வகுடி அமைப்புகள் அனைத்தும், தேர்தலே தேவையற்றது எனவும் தேர்தலுக்காகச் செலவிடும் இந்தப் பெருந்தொகையை சுத்தமான குடிநீருக்காகவும், உளவியல் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தலாம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதே கருத்தையே, சிறார் நல அமைப்புகளும் முன்வைத்துள்ளன. சிறார் நலனுக்காக நாளுக்கு 10 டொலர் என செலவிட்டிருக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பாலான கனேடியர்களும், தேர்தலுக்காக செலவிடப்பட்டுள்ள இந்தத் தொகையை பெருந்தொற்றிலிருந்து மீள மக்களுக்கு உதவும் வகையில் செலவிட்டிருக்கலாம் என்ற கருத்தையே முன்வைத்துள்ளனர்.
————–
Reported by : Sisil.L