கனடிய பொதுத் தேர்தலில் இம்முறை களமிறங்கும் 7 தமிழ் வேட்பாளர்கள்

கனடாவில் செப்டம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை ஏழு தமிழ் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஐவர் முதல் தடவையாக இத்தேர்தலில்தான் களமிறங்குகின்றார்கள்.லிபரல் கட்சியின் சார்பில் மூவரும், கன்சர்வேட்டிவ் கட்சியின்  சார்பில் இருவரும், தேசிய ஜனநாயகக் கட்சி, Bloc Quebecois  ஆகியவற்றின் சார்பில் தலா ஒருவரும் என தமிழ்  வேட்பாளர்கள் இம்முறை  போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஐவர் முதல் தடவையாக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


லிபரல் கட்சியின் சார்பில் அனிதா ஆனந்த் மீண்டும் Oakville தொகுதியிலும், ஹரி அனந்தசங்கரி மீண்டும் ஸ்காபுரோ றோஜ் பாக் தொகுதியில் போட்டியிட, முதல் தடவையாக வைத்தியர் அல்போன்ஸ் ராஜகுமார் சஸ்கற்றூன்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் சஜந்த் மோகனகாந்தன் யோர்க் தெற்கு தொகுதியிலும், மல்கம் பொன்னையன் ஸ்காபரோ மத்திய தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

 இவர்கள் இரு வரும் போட்டியிடும் முதலாவது தேர்தல் இதுவாகும்.
கியூபெக் மாகாணத்தில் மாத்திரம் வேட்பாளர்களை களம் இறக்கும் Bloc Quebecois  கட்சி சார்பில் ஷோபிகா வைத்தியநாதசர்மா றொஸி மவுண்ட்  Patrie தொகுதியில் இம்முறை போட்டியிடுகின்றார். ஒரு தமிழ் வேட்பாளர்,  
Bloc Quebecois சார்பில் போட்டியிடுவதும், கியூபெக் மாகாணத்தில் போட்டியிடுவதும் இதுவே முதல் தடவையாகும். தேசிய ஜனநாயக கட்சி (NDP) சார்பில் அஞ்சலி அப்பாதுரை வன்கூவர் கிரான்டவில் தொகுதியில் போட்டியிடுகிறார்.

 
இவரும் முதல் தடவையாக தேர்தல் அரசியலில் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
————————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *