கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேர்தலில் பின்னடைவை சந்திக்கின்றார் என்பதை வெளிப்படுத்தும் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
1200 வாக்காளர்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட நனோஸ் ஆராய்ச்சி கருத்துக்கணிப்பு முடிவுகள் பிரதமருக்கு பாதகமான விதத்தில் காணப்படுகின்றன.
ஆறு வருடங்கள் ஆட்சி செய்துள்ள பிரதமர் குறித்து பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
கனடா பிரதமரை விட எதிர்க்கட்சித் தலைவர் எரின் ஓ டுல் சிறிய வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
கனடாவின் கன்சவேர்டிவ் கட்சிக்கு 33.3வீத ஆதரவு உள்ளதையும் லிபரல் கட்சிக்கு 31 வீத ஆதரவு உள்ளதையும் கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸைக் கையாண்ட விதம் காரணமாக கனடிய மக்கள் தனக்கு பெரும்பான்மையை வழங்குவார்கள் என பிரதமர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
Reported by : Sisil.L