கனடாவுக்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் : கனடிய அரசு எச்சரிக்கை

ஒமிக்ரோன் பரவல் அச்சம் காரணமாக கிறிஸ்மஸ் விடுமுறைக் காலத்தில் தனது மக்களை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என  கனடா கேட்டுக்கொண்டுள்ளது.


ஒமிக்ரோன் பரவல் எங்களுக்கு மோசமான அச்சத்தை ஏற்படுத்துகின்றது. தொற்று அதிகரிப்பு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது என கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பயண ஆலோசனைகளை நான்கு வாரங்களுக்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ள அதிகாரிகள் எனினும் பெருந்தொற்று நிலைமை மோசமடைந்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளனர்.


கனடாவுக்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என  எங்கள் அரசாங்கம் தனது பிரஜைகளைக் கேட்டுக்கொள்கின்றது என சுகாதார அமைச்சர்  செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளுக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ள பிரஜைகளுக்கு தற்போது பயணம் மேற்கொள்வதற்கான நேரமில்லை என நான் தெளிவாக தெரிவிக்க விரும்பு கின்றேன் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


சர்வதேச அளவில் ஒமிக்ரோன் பரவி வருவது எங்களை அச்சப்பட வைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் கனடா பிரஜைகள் பாதிக்கப்படலாம் அல்லது நாடு திரும்ப முடியாத நிலைக்குத் தள்ளப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
———————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *