இந்த ஆண்டின் இறுதி அளவில், வர்த்தக வாய்ப்புகள் தொடர்பில் தாய்வானுக்குச் செல்ல கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளார்கள்.
ஆனால், தாய்வானுக்கு கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்ல திட்டமிட்டுள்ள விடயம் சீனாவை எரிச்சலூட்டியுள்ளது.
எனவே, தாய்வான் விடயத்தில் தலையிட்டால், சீனா கனடா மீது பயங்கர நடவடிக்கைகள் எடுக்கும் என சீனத் தரப்பு எச்சரித்துள்ளது.
சீனாவின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ள கனடா, சீனா கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தாய்வான் பயணத்தை இராணுவ அல்லது பொருளாதார ரீதியிலான வம்புச்சண்டை இழுப்பதற்குக் காரணமாக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளது.
சீனா தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதி எனக் கூறி, வெளிநாட்டவர்கள் அங்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
———-
Reported by :Maria.S