கனடாவில் மருத்துவர் எவரும் இல்லாத தீவு!

கனடாவின்  நியூபவுண்லான்டிலுள்ள ஃபோகோ தீவு மக்கள் மருத்துவ சேவை பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.


சுமார் இருநூறு ஆண்டுகளில் முதல் தடவையாக தீவு மக்கள் மருத்துவரின் சேவையை முழுமையாக இழக்கும் அபாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.


இந்தத் தீவில் பணியாற்றி வரும் ஒரேயொரு முழு நேர மருத்துவர் ஜூன் மாதம் சேவையிலிருந்து விலகிக் கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஃபோகோ தீவு(Fogo Island) மக்கள் மருத்துவரின் சேவையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஆறு மணித்தியாலங்கள் ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.


பொருளாதார நெருக்கடி நிலைமைகள் மற்றும் சனத்தொகைப் பரம்பல் ஆகிய காரணிகளினால் நியூபவுண்ட்லான்ட்டின் பல நகரங்களில் இவ்வாறான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


1792 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக ஃபோகோ தீவு மக்கள், வதிவிட மருத்துவர் ஒருவரின் சேவையை பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


நியூபவுண்ட்லான்டில் சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு குடும்ப மருத்துவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *