கனடாவில், இந்துக கோவில்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கடந்த மாதம் ஆஞ்சநேயர் கோவிலை சில மர்ம நபர்கள் சூறையாடிய நிலையில் அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அம்மன் கோவில், சிவன் கோவில், ஜெகன்நாதர் கோவில் என அடுத்தடுத்து பல கோவில்கள் சூறையாடப்பட்டன.
கடந்த 30ஆம் திகதி மிசிசவுகா பகுதியிலுள்ள ஒரு ஹிந்து கலாசார மையத்துக்குள் நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்தனர். உள்ளே இருந்த நன்கொடை உண்டியல்களை உடைத்து, அதிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்த திருடர்கள், அந்த மையத்தையும் சூறையாடினர்.
கனடாவில், இந்துக் கோவில்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
அந்தப் பகுதியில் உள்ள ‘கமெரா’க்களை, பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர். முகமூடி அணிந்திருப்பதால் மர்ம நபர்களின் அடையாளங்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை கனடாவில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கோவில்கள் சூறையாடப்பட்டு வருவதால், நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனால் அர்ச்சகர்களும், பக்தர்களும் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவத்தை தொடர்ந்து இந்துக் கோவில்களில் பொலிஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
———————-
Reported by : Sisil.L