கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் பத்து வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கனேடியர்கள் தங்களது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள நேரிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் 9.7 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பழங்களின் விலைகள் 10 வீதத்தினாலும் பெஸ்டா வகைகளின் விலைகள் 20 வீதத்தினாலும் உயர்வடைந்துள்ளன.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த காரணத்தினால் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லா உணவு வகைகளையும் உண்ண முடியாத காரணத்தினால் அவ்வாறானவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
————-
Reported by : Anthonippillai.R