கனடாவில் இரு தினங்கள் நடைபெறும் கோலாகல தமிழ் தெரு விழா

கனடாவின் மாபெரும் தமிழ் தெரு விழா மீண்டும் இன்று சனி மற்றும் நாளை ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.


தென் ஆசியாவுக்கு வெளியே நடைபெறும் மாபெரும் தமிழ் நிகழ்வாக இந்த தமிழ் தெரு விழா கருதப்படுகின்றது.


கொவிட் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தமிழ் தெரு விழா கோலாகலமாக இடம்பெறவுள்ளது.


இதன்படி கனடாவின் ஸ்காபரோவின் மார்க்கம் வீதியில் இத் தெருவிழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு இன்று (27) மற்றும் நாளை (28) நடைபெறுகின்றது.


தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 
 கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ் தெரு நிகழ்வில் பெருமளவிலான தமிழ் மக்கள் (சுமார் 250,000 பேர்) பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்வில் உள்ளுரில் இயங்கி வரும் பத்துக்கும் மேற்பட்ட உணவுக்கடைகள் மற்றும் ரெஸ்ரூரன்ட்கள் உணவு விற்பனையில் ஈடுபடவுள்ளன.

 
இந்திய மற்றும் இலங்கையின் புகழ்பூத்த இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றனர்.


மேலும் மொத்தமாக 300 கலைஞர்கள் இந்த இரு நாள் நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
——–
Reported by Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *