கனடாவில் அழுகிய நிலையில்  சிறுவனின் சடலம் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மீட்பு

கனடாவில் வீட்டின் அடித்தளத்தில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மூன்று வயது சிறுவன் அழுகிய நிலையில் சடலமாக மீட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுவனின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


டெட்ராய்டின் மேற்குப் பகுதியில் உள்ள கிராண்ட் ரிவர் அவென்யூ மற்றும் ஃபுல்லர்டன் தெரு சந்திப்புக்கு அருகில் உள்ள மான்டே விஸ்டா தெருவின் 12700 பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் குறித்து காவல் துறைத் தலைவர் ஜேம்ஸ் வைட் கூறுகையில், குழந்தைகள் பாதுகாப்புச் சேவையின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது சிறுவனின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.


சிறுவன் எப்படி, எப்போது இறந்தான், அவனது உடல் எவ்வளவு நேரம் குளிரூட்டியில் இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.


இந்நிலையில் சிறுவனின் மரணத்துக்கான காரணத்தையும் கண்டறியும் முயற்சியாக பிரேதப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
————————

Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *